கல்வி நோக்கங்கள் (Program Educational Objectives - PEOs)
தமிழ்த்துறை பட்டப்படிப்புகள் மாணவர்களின் மொழிப்புலமை, இலக்கிய ஆளுமை, திறனாய்வுச் சிந்தனை மற்றும் தொழில்சார் திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
| எண் | கல்வி நோக்கங்கள் (PEOs) |
|---|---|
| PEO 1 | தமிழ் மொழி, மரபு இலக்கணம் மற்றும் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான ஆழமான அறிவையும் நுண்ணிய புரிதலையும் மாணவர்களிடத்தில் உருவாக்குதல். |
| PEO 2 | படைப்பாற்றல், திறனாய்வுச் சிந்தனை, உரைநடை நடைத்திறன் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன்களை மேம்படுத்தி அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் இதழியலில் சிறந்து விளங்கச் செய்தல். |
| PEO 3 | தொன்மை வாய்ந்த தமிழ் கலாச்சாரம், சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கியச் செழுமையைப் பாதுகாத்து உலகளாவிய ஆராய்ச்சித் தளங்களில் தமிழாய்வுகளை முன்னெடுக்கும் ஆய்வாளர்களாக உருவாக்குதல். |
| PEO 4 | போட்டித் தேர்வுகள் (TNPSC, UPSC, TRB, NET/SET), பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிகள், வங்கி மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்குத் தேவையான வழிகாட்டலையும் தகுதிகளையும் வழங்குதல். |
| PEO 5 | சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் அறநெறிக் கோட்பாடுகள், சமுதாயப் பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மனிதநேய விழுமியங்களைக் கொண்ட முன்மாதிரி குடிமக்களாக மாணவர்களை உருவாக்குதல். |